நடிகை சம்யுக்தா மேனன் கையில் குவிந்த படங்கள்.. ரசிகர்கள் ஹாப்பி!
சம்யுக்தா மேனன்
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

ரசிகர்கள் ஹாப்பி!
இந்நிலையில், தற்போது சம்யுக்தா கைவசம் தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது.
அந்த வகையில், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி 'அகண்டா 2' படம் வெளியாக உள்ளது. இது இந்த ஆண்டு வெளியாகும் அவரது ஒரே படமாகும். அடுத்த ஆண்டில், சம்யுக்தா இரண்டு அடுத்தடுத்து படங்களுடன் திரைக்கு வருகிறார்.
முதலில் "சுயம்பு", நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது. அதே நேரத்தில், நீண்ட காலமாக தாமதமாகி வந்த "நரி நரி நடும முராரி" படமும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவரது முதல் இந்தி படம் ஏப்ரலில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 5 மாதங்களுக்குள் தொடர்ந்து அவரது 4 படங்கள் திரைக்கு வர இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.