ஆடையில்லா காட்சியில் நடிக்க கேட்ட இயக்குநர்!! சுழல் 2 நடிகை சம்யுக்தா ஓபன் டாக்..
சுழல் 2
இயக்குநர் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் சுழல் 2. மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சுழல் 2 வெப் தொடரில் 8 நடிகைகள் நடித்துள்ளனர். கட்சி சேர ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டு பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதனும் சுழல் 2வில் முக்கிய ரோலில் நடித்தார்.
8 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில், பெண்கள் சிறைச்சாலைக்கு வரும் 8 பெண்களையும் ஜெயில் வார்டன் ஆடைகளை கழற்றச்சொல்லி நிர்வாணமாக நிற்க வைத்து சோதனையிடும் காட்சி இடம் பெற்றிருக்கும்.
சம்யிக்தா விஸ்வநாதன்
வலிமையான வசனங்களும் அந்த காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த காட்சியில் நடித்தது குறித்து சம்யிக்தா அளித்த பேட்டியொன்றில், இயக்குநர் சர்ஜுன் என்னிடம் இந்த சீனை இப்படித்தான் பண்ணப்போகிறோம். உங்களுக்கு கம்ஃபர்டபிளா இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் மாற்றிவிடுகிறேன் என்று கூறினார்.
பெண்கள் சிறைச்சாலை குறித்து ரொம்பவே ராவாக எடுத்துக்கொண்டிருப்பதால், அந்த சீனுக்கும் கதைக்கும் தேவைப்பட்டதால் என்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு அதில் நடித்தேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் சம்யிக்தா விஸ்வநாதன்.