கணவர் கிரிஷ் உடன் விவாகரத்து செய்ய போறேனா!! நடிகை சங்கீதாவிடம் மாமியார் கேட்ட ஒரு கேள்வி..
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சங்கீதா. தமிழ், மலையாளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்த சங்கீதா, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்.
பாடகர் கிரிஷ்-ஐ திருமணம் செய்தப்பின் கதாநாயகியாக நடிக்காமல் குணச்சித்திர ரோல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். சமீபத்தில் சங்கீதா அளித்த பேட்டியொன்றில் விவாகரத்து பற்றிய வதந்தியை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

அதில் நடிகை சங்கீதா, என் மாமியார் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒருநாள் வீட்டிற்கு வராமல் கால் செய்ததும், நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன் மறைக்காமல் பதில் சொல்லனும் என்று கேட்டார்கள்.
நீயும் கிரிஷும் விவாகரத்து செய்யபோகீறீர்களா என்று என் மாமியார் என்னிடம் கேட்டார்கள். விவாகரத்து செய்ய போறீங்கன்னு பத்திரிக்கைகளில் போட்டிருக்கு அதனால் பயந்து கேட்டார்கள்.
அதற்கு சங்கீதா எவனோ ஒருவன், அவன் கற்பனைக்கு போட்டிருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டதாகவும் அப்போது தான் நான் மீடியாவின் பவர் என்னவென்று புரிந்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.