துப்பாக்கி விஜய்யின் தங்கச்சியா இது? கிளாமர் லுக்கில் ஆடையாளமே தெரியாமல் இருக்காங்க..
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா சாரதி.
துப்பாக்கி படத்திற்கு பின், என்றென்றும் புன்னகை, வாலும் எனை நோக்கி பாயும் தோட்டா, #Bro, வாரிசு போன்ற படங்களில் தங்கை ரோலிலும் நடித்து வந்தார். ஓடிடி தளத்தில் வெளியான சில படங்களிலும் நடித்துள்ள சஞ்னா சாரதி, விஜய் படம் குறித்த சில தகவலை பகிர்ந்துள்ளார்.
துப்பாக்கி படத்திற்கு பின் வேறொரு விஜய் படத்தில் நடிக்க கேட்டார்கள். அந்த படத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் அந்த படத்திலும் விஜய் சாருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே கம்மியான ஸ்கிரீன் என்பதால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது சஞ்சனா சாரதி சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து துப்பாக்கி விஜய் ரீல் தங்கச்சியா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.



