இந்த வார பிக் பாஸ் எலிமினேஷன் இவர்தான்! இந்த ட்விஸ்ட் எதிர்பார்கலையே
பிக் பாஸ் 5 வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் நடிகர் சஞ்சீவ். இந்த வாரம் நடந்த டாஸ்குகளின் முடிவில் அமீர் ஜெயித்த நிலையில் அவருக்கு டிக்கெட் டு ஃபினாலே வழங்கப்பட்டு இருக்கிறது. அமீர் தவிர மீதம் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் தொடர்கிறார்கள்.
இந்நிலையில் இன்று வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது. எலிமினேஷன் யார் என தெரிய ரசிகர்கள் மிக அதிக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அது பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது.
நடிகர் சஞ்சீவ் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார். அவர் விஜய்யின் மிக நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கு விஜய் ஃபேன்ஸ் ஓட்டு போட்டு ஆதரவு அளிப்பார்கள் என முன்பிருந்தே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது அவர்கள் கூட சஞ்சீவுக்கு ஓட்டு போடவில்லை போல. அதனால் சஞ்சீவ் இன்று ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.