நடிகருக்காக போட்டிப்போடும் நடிகைகள்! ஷாக்கான ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Janhvi Kapoor Vijay Deverakonda Gossip Today
By Edward Jul 13, 2022 05:15 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பெண் ரசிகர்கள் பட்டாளத்தையே கட்டுப்படுத்தி நடித்து வந்தார். தற்போது பாலிவுட் வரை சென்றுள்ள விஜய் தேவரகொண்டா, நடிகை சார்மி இயக்கும் லிகர் படத்தில் நடித்துள்ளார்.

நடிகருக்காக போட்டிப்போடும் நடிகைகள்! ஷாக்கான ஸ்ரீதேவி மகள் ஜான்வி | Saraalikhan Saying Like To Date Him On A Chat Show

நடிகை அனன்யா பாண்டே ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் டீசரும், பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டின் வாரிசு நடிகைகளாக திகழ்ந்து புகழ் பெற்று வரும் நடிகை சாரா அலி கான், ஜான்வி கபூரும் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காப்பி வித் கரண் ஷாவில் கலந்து கொண்ட இருவரும் தங்களின் மனம் திறந்த பதில்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். நிகழ்ச்சியின் முழு வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நிலையில் கரண் ஜோகர் ஜான்வி - சாரா பகிர்ந்து கொண்ட பிரமோ வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், யாருடன் டேட்டிங் செல்ல விருப்பம் என்ற கேள்விக்கு, இல்லை இல்லை என்று முதலில் பதிலளித்த சாரா அலிகான், பின் விஜய் தேவரகொண்டா என்று கூறினார். இதனை கேட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளார். ஏன் என்று கேட்டால் எனக்கு விஜய் தேவரகொண்டா கிரஷ் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிளே பாய் என்ற பெயரை எடுத்து வரும் விஜய் தேவரகொண்டா இதை அறிந்து ஜான்வி - சாராவிற்கு ரீப்ளே செய்துள்ளார். ஐ லவ் விஜய் தேவரகொண்டா-ன்னு சொன்னது க்யூட்டாக இருந்தது. பிக் ஹக் மற்றும் என்னுடைய அன்பை இருவருக்கும் அனுப்புகிறேன் என்று பதிலளித்து பதிவிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா ஏற்கனவே ராஷ்மிகா மந்தனாவுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அனன்யா பாண்டேவுடனும் காதல் கிசுகிசுக்கவும் செய்யப்பட்டதை அடுத்து இந்த விசயம் பாலிவுட் திரையுலகில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Gallery