வாய்ப்பு கொடுத்த விஜயகாந்தை அடிக்கனுமா... 32 வருட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று பலரால் புகழப்பட்டு கொண்டாடப்பட்டவர் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். சினிமாவில் பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த விஜயகாந்த், வடிவேலு உள்ளிட்ட பல கலைஞர்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார். அவரின் காலக்கட்டத்தில் வில்லனாக அறிமுகமாகியவர் நடிகர் சரத்குமார்.
ஆரம்பத்தில் சிறு ரோலில் நடித்த சரத்குமார் பின் ஒருசில படங்களில் கதாநாயகன் ரோலிலும் நடித்து வந்தார். அப்படி சரத்குமாருக்கு விஜயகாந்த் உறுதுணையாக இருந்து தூக்கிவிட்ட படம் புலன் விசாரணை.
ஆட்டோ சங்கரின் கதையை அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ஆனந்த்ராஜ், ராதாரவியுடன் நடித்திருப்பார் சரத்குமார். ஒரு காட்சியின் போது விஜயகாந்திடம் சண்டை போடும் போது தன்னை அடிக்க சரத்குமாரிடம் கூறியிருக்கிறார்.
எப்படி அடிக்க முடியும் என்று சரத்குமார் தயங்கி இருக்க, வில்லனிடன் ஹீரோ அடிவாங்கினால் தான் நன்றாக இருக்கும். அதனால் நீ அடி என்று கூறியிருக்கிறார். அதன்பின் விஜயகாந்திற்கு வந்த வாய்ப்பினை கூட சரத்குமாருகாக விட்டு கொடுத்ததாக அவரே மேடையில் கூறியிருக்கிறார்.
அப்படி இருந்த மனிதன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் தவித்து வருகிறாரே என ரசிகர்களும் தொண்டர்களும் புலம்பி வருகிறார்கள்.