சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டிற்கு சென்றுள்ள சரத்குமார், ராதிகா.. காரணம் என்ன
நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சரத்குமார் - ராதிகா. இவர்கள் இருவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது ஈசிஆரில் உள்ள தங்களது சொந்த வீட்டைவிட்டு தற்போது வாடகை வீட்டிற்கு சரத்குமார் மற்றும் ராதிகா சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து ஒரு பேட்டியில் நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
இதில், 14 முதல் 15 ஆயிரம் Sqft கொண்ட வீடு அது, அந்த வீட்டின் ஏழு கதவுகளையும் மூட வேண்டும், 15 வேலைக்காரர்கள் அந்த வீட்டிற்காக தேவை. தனியாக நான் இருப்பேன். ஆனால், ராதிகாவால் முடியாது. மகன் வெளிநாட்டில் படிக்கிறான், மகள்கள் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வீட்டில் உள்ளனர்.
தனியாக இருப்பது என்பது கடினம் என இப்போது ஆழ்வார்பேட்டைக்கு வந்துவிட்டோம். ஈசிஆரில் உள்ள அந்த வீட்டை ஒரு ஐடி கம்பெனிக்கு வாடகை விட்டிருக்கிறோம் என சரத்குமார் கூறியுள்ளார்.