காத்திருந்த விஜய்..தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லி அனுப்பிய அஜித்!! பிரபல இயக்குநர் ஓப்பன் டாக்..

Ajith Kumar Vijay Gossip Today
By Edward Nov 12, 2024 02:30 PM GMT
Report

விடாமுயற்சி, குட் பேட் அக்லி

டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சில காட்சிகள் விடாமுயற்சி படத்திலும் சில ஷெட்டியூல்கள் குட் பேட் அட்லி படத்திலும் எடுக்கவுள்ளது. அடுத்த வருடம் தான் இந்த இரு படங்களிலும் திரையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காத்திருந்த விஜய்..தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லி அனுப்பிய அஜித்!! பிரபல இயக்குநர் ஓப்பன் டாக்.. | Saravana Subbaiah Talks About Ajith And Vijay

சிட்டிசன்

இந்நிலையில், அஜித்தின் கரியரில் மிகமுக்கிய படமாக பார்க்கப்படும் சிட்டிசன் படத்தின் இயக்குநர் சரவண சுப்பையா, அஜித்துடனான அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், முதலில் அஜித்திடம் சிட்டிசன் கதையை சொன்னபோது நடந்த சம்பவமே வேறு. அதாவது அவர் முகவரி ஷூட்டிங்கில் இருந்தபோது அவரிடம் கதையை சொல்லபோனேன்.

அவர் என்னிடம் கதையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தாருங்கள் என்றது சில நாட்களில் தந்துவிடுவதாக கூறியபோது அவர் என்னிடம் கதை பிடித்திருந்தால் நானே அழைப்பேன், அதுவரை என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டார் அஜித்.

காத்திருந்த விஜய்..தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லி அனுப்பிய அஜித்!! பிரபல இயக்குநர் ஓப்பன் டாக்.. | Saravana Subbaiah Talks About Ajith And Vijay

சில நாட்களாகியும் அஜித் அழைக்காதபோது, விஜய்யிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்தார். அங்கு சென்று கொண்டிருந்தபோது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தரப்பில் ஒருவர் என்னிடம் வந்து, உங்களை அஜித் பார்க்கவேண்டும் என்கிறார், உடனே வாருங்கள் என்று அழைத்தார்.

அங்கு சென்றதும் கதை அபாரமாக இருக்கிறது, பாதித்தான் படித்தேன் இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன், உடனே இந்தப்படத்தை செய்யலாம், இரண்டு படங்களுக்கு தரவேண்டிய கால்ஷீட்டை இந்தப் படத்துக்கு தருகிறேன், நீங்கள் சென்று சக்கரவர்த்தியை பாருங்கள் என்று சொன்னார்.

பின் சக்கரவர்த்தியை பார்த்து அட்வான்ஸும் வாங்கிவிட்டேன். அந்த சமயத்தில் விஜய்யிடம் கதை சொல்லமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் இயக்குநர் சரவண சுப்பையா தெரிவித்திருக்கிறார்.