2வது மனைவியுடன் முதல் மனைவி வீட்டுக்கு எதிரே குடித்தனம் செய்யும் நடிகர் சரவணன்
நடிகர் சரவணன்
தமிழ் சினிமாவில் 80களில் டாப் இடத்தில் இருந்த நடிகர் சரவணன் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சட்டமும் நீதியும் என்ற ஓடிடி தொடர் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பருத்திவீரன் சரவணனின் முதல் மனைவி சூர்யஸ்ரீ, தற்போது காவல்நிலையத்தில் அவர் மீது புகாரளித்துள்ளார்.
அதில், சரவணன், இரண்டாம் திருமணம் செய்துகொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்து இருக்கிறார். இதனால் தினமும் சண்டை தகராறு வந்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு செருப்பு ஸ்டாண்டை கூட வைத்துக்கொள்ள கூடாது, இந்த வீடு என்னுடையது என எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். ஒன்றுமே இல்லாமல் அந்த பெண் என் வீட்டுக்கு வந்தபோது அவளுக்கு ஆதரவு கொடுத்து பார்த்துக்கொண்டது நான் தான். அந்த பெண் அந்த நன்றியை மறந்துவிட்டாள்.
என் வீட்டு கதவு திறந்து இருந்தும் அதை காலால் உதைக்கிறாள். செருப்பு ஸ்டாண்ட் ஆரம்பித்து என் கண்வருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது என்று போட்டோவை எடுத்து சென்றுவிட்டாள். சரவணன் எனக்கு செலவுக்கு எந்தவிதமான பணத்தையும் கொடுக்கவில்லை, விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் அவர் ஒருமுறை கூட அதற்கு ஆஜராகவில்லை.
சரவணன் எனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், அவரால் மாதம் மாதம் பணத்தை கொடுக்க முடியாது என்றால், ஒரே செட்டில்மெண்ட்டாக கொடுக்க வேண்டும், இப்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன், என் அப்பா, அண்ணன் இவர்கள் தான் என்னை பார்த்துக்கொள்கிறார்கள் என்று சரவணனின் முதல் மனைவி புகாரில் தெரிவித்துள்ளார்.