சரிகமப சீசன் 4ன் முதல் இறுதி சுற்று போட்டியாளர் இவர்தான்!! வெளியான வீடியோ..
Saregamapa Lil Champs S4
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி தற்போது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாப்ஸ் (Saregamapa Lil Champs).
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி இந்நிகழ்ச்சியின் Saregamapa Lil Champs Season 4 தற்போது நடந்து வருகிறது. இந்த வாரம் இறுதி போட்டிக்கான டிக்கெட் டூ பினாலே ரவுண்ட் நடந்து வருகிறது.
தற்போது சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் முதல் ஃபைனலிஸ்ட் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இறுதி சுற்று போட்டியாளர்
அதில் சிறப்பாக பாடிய, போட்டியாளர் ஹேமித்ரா தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-ல் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ’தித்திக்குதே’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி அசத்தினார்.
அதன்பின் சீசன் 4ல் கலந்து கொண்டு பல பாடல்களை பாடி, பலமுறை கோல்டன் ஷவர் பர்ஃபார்மன்ஸ்-ஐ கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஹேமித்ரா.
தற்போது அவர் Saregamapa Lil Champs S4 First Finalist இடத்தை பிடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார் ஹேமித்ரா.