சரிகமப சீசன் 4ன் இரண்டாவது இறுதி சுற்று போட்டியாளர் யார்!! பிரமோ வீடியோ..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி தற்போது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாப்ஸ் (Saregamapa Lil Champs).
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி இந்நிகழ்ச்சியின் Saregamapa Lil Champs Season 4 தற்போது நடந்து வருகிறது.
இந்த வாரம் இறுதி போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே ரவுன்ட் நடக்கவுள்ளது. சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் முதல் ஃபைனலிஸ்ட்-ஆக சிறப்பாக பாடிய, போட்டியாளர் ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 2வது இறுதி போட்டியாளர் யார் பிடிப்பார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் வரும் வார எபிசோட்டில் பிரமோ வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில் 2வது ஃபைனலிஸ்ட் இடத்தை பிடிக்க சுட்டிக் குழந்தைகள் தங்களின் ஸ்டைலில் பாடி நடுவர்களை வியக்க வைத்துள்ளனர். அந்த பிரமோ வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.