விவாகரத்துக்கு பின் பணத்திற்கே கஷ்டப்பட்ட சரிகா! இப்படியொரு படத்தில் நடித்துள்ளாரா?

Kamal Haasan Shruti Haasan Sarika
By Edward May 14, 2022 11:45 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் இப்போதும் கோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் லோகேஷ் இயக்கத்தில் நடித்து இருக்கும் விக்ரம் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

அது மட்டுமின்றி பிக் பாஸ் ஷோ தொகுத்து வழங்குவதன் மூலமாகவும் அவருக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கிறது. மேலும் அவர் அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி கமல் கோடிகளில் புரள்கிறார் என்றால் மறுபுறம் அவரது முன்னாள் மனைவியான சரிகா தான் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.

இப்போதும் அவர் சினிமாவில் நடித்து வரும் நிலையில் கொரோனா லாஃடவுனுக்கு முன்பு படங்களில் நடிக்காமல் தியேட்டர் நாடங்களில் நடித்து வந்திருக்கிறார். லாஃடவுன் வந்ததால் அவருக்கு சுத்தமாக வருமானம் இல்லாமல் கையில் இருந்த பணம் மொத்தமும் கரைந்துவிட்டதாம்.

அது பற்றி பேட்டி அளித்திருக்கும் சரிகா தான் நாடங்களில் நடிக்க சென்றால் வெறும் 2000 முதல் 2700 ருபாய் வரை மட்டுமே கிடைக்கும், ஒரு கட்டத்தில் சுத்தமாக பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன் என கூறி இருந்திருந்தார்.

இந்நிலையில், மாடர்ன் லவ் என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். 60 வயதானவர் 30 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்ட ஒரு கட்டத்தில் காதலித்து விடுகிறார் அந்த இளைஞர்.

இதை அறிந்து தண்டித்த அனுப்பி வைத்து பின் மனதுக்குள்ளே பல கேள்வி எழ அந்த இளைஞர் விசயத்தில் என்ன முடிவெடுக்கிறார் என்றகதையுட முடிவடைகிறது. படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் சரிகா என்று பலர் பாராட்டியும் வருகிறார்கள்.