17 வயது நடிகை லட்சுமி மேனனுடன் லிப்லாக் சீன்!! வேறுவழியில்லாமல் சசிகுமார் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சுப்ரமணியபுரம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் சசிகுமார். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கி வந்த சசிகுமார் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து கருடன் படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரமோஷனுக்காக சசிகுமாரும் சூரியும் பேட்டியளித்து வருகிறார்கள்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் சூரி அடுத்த படத்தில் நடிகையுடன் லிப்லாக் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றால் உங்களின் கருத்து என்ன என்று சசிகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சூரி, இதெல்லாம் யாராச்சும் நம்புவார்களா? என்று கூற, சூரி சரியான படத்தை தேர்வு செய்வான்னு நம்பிக்கை இருக்கு, ஆனால், எதிர்காலத்தில் கதைக்கு தேவைப்பட்டால், அவனே ஓகே சொல்லுவான் என்று காமெடியாக கூறியிருக்கிறார் சசிகுமார்.
என் படத்திலும் லிப்லாக் சீன்லாம் வெச்சாங்க, நான் தப்பித்து போய்விட்டேன். குட்டிப் புலி படத்தில் நடிகைக்கு லிப்லாக் வெச்சாங்க. கன்னத்தில் குடுக்கும் போது தாலியே கொடுத்து இருக்கியேன்னு லிப்லாக் கொடுக்கனும் என்று இயக்குனர் சொல்லிட்டாரு. குட்டிப்புலி-ன்னு வெச்சிட்டு, அம்மா, பையன் கதையா இருக்கு, இதுல லிப்லாக்ன்னு சொன்னதும் பயந்தேன்.
அதன்பின் ஹீரோயினே ஒத்துக்கொண்டார்கள் நீங்கள் ஏன் சார் என்று இயக்குனர் என்னிடம் சொன்னார். முத்தம் கொடுக்கும் காட்சியில் அதை செய்யாமலே அந்த காட்சியை வேறுமாதிரியாக படமாக்கிவிட்டோம். லிப்லாக் அடிக்காமல், டயலாக், ஷாட்டில் வைத்து அது நடந்ததாக அப்படியே காட்டிவிட்டோம் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.