அப்பா, அம்மாவை ஒதுக்கி வந்த விஜய்யா இது!! ஒரே புகைப்படத்தால் முற்றுப்புள்ளி வைத்த தளபதி..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது, கோட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, சிஜி வேலைகளுக்காக வெளிநாட்டுக்கு சென்று திரும்பி இருக்கிறார். விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் விஜய் பற்றிய சில வதந்திகளும் சர்ச்சைகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அப்பா, அம்மாவை கண்டுக்கொள்ளாமல் தனியாக விட்டுவிட்டதாகவும், சங்கீதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்துள்ளது.
சமீபத்தில் கூட நடிகர் விஜய் வீட்டில் நடிகை திரிஷா குடித்துவிட்டு ஆட்டம் போட்டார் என்று பாடகி சுசித்ரா சொன்னதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகர் விஜய் சில விஷயங்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் தன்னுடைய அம்மாவுக்காக சாய் பாபா கோவில் கட்டி கொடுத்த விஷயம் டிரெண்ட்டாகியது. தற்போது அரசியல் கட்சியை ஆரம்பித்த பின் முதல் முறையாக தன்னுடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா இருவரையும் சந்தித்து பேசியிருக்கிறார் விஜய். அப்பா, அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இதனை ஷோபா சந்திரசேகர் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
You May Like This Video
