விஜய் திருந்திக்கோ, ச்சே!.. தவெக தலைவர் குறித்து நடிகர் சத்யராஜ் ஆவேசம்!
விஜய்
விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, கரூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சத்யராஜ் ஆவேசம்!
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசிய விஷயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளைப்பாடி விஜயை ஆவேகமாக சாடியுள்ளார். அதில், " தவறு என்பது தவறிச்செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்.
சிந்தித்துப்பார்த்து செய்கையை மாத்து, சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தெரிஞ்சு தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராமா பார்த்துக்கோ, ச்சே!” என கூறியுள்ளார்.