காமெடி என்ற பெயரில் நடிகர்களை அசிங்கப்படுத்தும் கவுண்டமணி? உண்மையை உடைத்த சத்யராஜ்...

Sathyaraj Goundamani S.J.Suryah Manivannan
By Edward Jul 07, 2022 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் காமெடி லிஜெண்ட் என்று கூறப்படுபவர் நடிகர் கவுண்டமணி. அவரது காமெடி சென்ஸ் மக்கள் மத்தியில் மிகவும் ஈர்த்து வந்தவர். படம் ஓடுகிறதோ இல்லையோ இவர் படத்தில் இருந்தாலே போதும் தியேட்டரில் கூட்டம் அள்ளும் அளவிற்கு அவரது ரசிகர்கள் படத்தினை பார்க்க வருவார்கள்.

காமெடி என்ற பெயரில் நடிகர்களை அசிங்கப்படுத்தும் கவுண்டமணி? உண்மையை உடைத்த சத்யராஜ்... | Sathyaraj Share Goundamani Comedy Sense Co Stars

தற்போது வயதாகிவிட்டதால் ஒருசில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார் கவுண்டமணி அவர்கள். அந்தவகையில் அவருடன் பணியாற்றிய சில நட்சத்திரங்கள் கவுண்டமணியுடனான அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

அப்படி அவருடன் பல படங்களில் நடித்து வந்த நடிகர் சத்யராஜ், மேடைகளில் கவுண்டமணியை புகழ்ந்து பேசுவதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன் டிடி தொகுத்து வழங்கிய ஒரு பேட்டியில் சத்யராஜ், கவுண்டமணியின் காமெடி பற்றி பகிர்ந்துள்ளார். ரவுண்ட்கட்டி அடிக்கிற ஆள்தான் கவுண்டமணி. அப்படி ஒருமுறை ஒரு ஹீரோயினின் தம்பி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

காமெடி என்ற பெயரில் நடிகர்களை அசிங்கப்படுத்தும் கவுண்டமணி? உண்மையை உடைத்த சத்யராஜ்... | Sathyaraj Share Goundamani Comedy Sense Co Stars

அந்த படத்தில் விளம்பரம் வந்தபோது அந்த ஹீரோயின் கவுண்டமணியிடம், என் தம்பி வந்துருவான்ல என்று கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி வந்துருவாம்மா ஆட்டோல என்று கூறி செட்டே காமெடி ஆக்கிவிட்டார். ஒரு இயக்குனர், மலையாள டைப்பில் பேசக்கூடியவர், கவுண்டமணியிடம் இந்த படம் வெளியாகிவிட்டா பாரதிராஜாவையே தாண்டும் என்று கூறியதற்கு, எப்படிப்பா குணியவெச்சா என்று கவுண்டர் அடிப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும், புதுசா நடிக்க வந்த நடிகரை பார்த்து, அவர் மூச்சை பாருங்க சத்யராஜ், ஆத்து தண்ணி போகும் போது முகத்த பார்த்த மாதிரி இருக்கு என்று கிண்டல் செய்வார். மேலும் சக நடிகர்களையும் கவுண்டமணி கிண்டல் செய்து பேசியுள்ளதை ரசிகர்கள் சக நடிகர்களின் உடலை வைத்து கிண்டல் செய்வது சரிதானா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.