என் கூட தங்க 7000 டாலர் கொடுப்பேன்னு சொன்னாரு!! அதிர்ச்சி கொடுத்த நடிகை சீமா..
சீமா சஜ்தே
பாலிவுட் சினிமாவில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பவர் தான் ஃபேஷன் டிசைனர் சீமா சஜ்தே. சொகைல் கானின் முன்னாள் மனைவியான இவர் தற்போது அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.
சொகைல் கானுடனான திருமணத்திற்கு முன் சீமாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் விக்ரம் அஹுஜாவுடன் தற்போது டேட்டிங் செய்து வருகிறார். சமீபத்தில் Fabulous Lives of Bollywood Wives பிரமோஷனுக்காக சீமாவுடன் அதில் நடித்த நடிகைகளும் கலந்து கொண்டனர்.
அதில், உங்களுக்கு வந்த விசித்திரமான மெசேஜ் என்ன என்ற கேள்விக்கு, ஒருவர், என்னை அவருடன் வைத்திருக்க விரும்புவதாகவும் அதற்காக மாதம் மாதம் ஒரு பெரும் தொகையை கொடுப்பதாகவும் கூறி அந்த ஆள் எனக்கு ஒரு மாத பட்ஜெட் கொடுத்தார். இதை கேட்டதும் அருகில் இருந்த நடிகைகள் ஷாக்காகினார்.
மாதம் 7000 டாலர்
மேலும் பேசிய சீமா, அவர் பார்க்க 100 வயது போல் இருந்தது எனக்கு விசித்திரமாக இருந்தது. அவர் என்னிடம் வந்து நான் உங்களுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், ஆனால் மாதத்துக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டாலர்தான் பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறினார்.
அவரை பார்க்கும் போது எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்று சீமா சஜ்தே தெரிவித்துள்ளார். இதன்பின் நடிகை மஹீப் கபூர் சீமாவிடம், அந்த ஆள் அந்த தொகையை ஒரு நாளைக்கு என்று குறிப்பிட்டாரா? அல்லது ஒரு மாதத்துக்கா? எனக் கேட்க, நான் அவரிடம் பேசவே இல்லை மஹீப் என்று சிரித்தபடி சீமா கூறிய விஷயம் தற்போது பாலிவுட் சினிமாவையே அதிர வைத்திருக்கிறது.