பரப்புரையின் போது சிறுவனுக்கு நடந்த சம்பவம்!! சீமான் கொடுத்த ரியாக்ஷன்..
சீமான்
பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இயக்குநராக திகழ்ந்த் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவராக திகழ்ந்து வரும் சீமான், அரசியலை தவிர்த்து தற்போது நடிப்பிலும் அசத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிமான், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
இதனையடுத்து வரும் 2026ன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், தன் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான்.

அந்தவகையில் காரைக்குடி பிரச்சாரத்தின் போது அவரை சிறுவன் ஒருவன் சந்திக்க வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுவனை கட்டியணைத்த சீமான் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார். உடனே அந்த சிறுவன தன்னுடைய உதட்டை துடைத்துக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. மேலும் சில நாட்களுக்கு முன் ஒரு சிறுமிக்கு முத்தம் கொடுத்த வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.