இரண்டாம் மனைவி கீதாஞ்சலியை பிரிகிறாரா செல்வராகவன்.. பதிலடி கொடுத்து அவரே போட்ட பதிவு..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன், புதுபேட்டை, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கி வெற்றியை கொடுத்தார்.
தனுஷின் இந்த உச்சக்கட்ட வளர்ச்சிக்கு செல்வராகவனும் ஒரு மையப்புள்ளியாக இருந்தவர். இயக்குனராக வளம் வந்த செல்வராகவன் தற்போது பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்தும் இருக்கிறார்.
செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் நேற்று போட்ட ஒரு டிவிட்டால் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
"தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என்று செல்வராகவன் போட்டுள்ளார்.
இதனை நெட்டிசன்கள் விவாகரத்தா என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலாக செல்வராகவன் ஒரு பதிவினை போட்டுள்ளார்.