மீண்டும் தனது முதல் மனைவியுடன் இணைகிறாரா செல்வராகவன்.. விவாகரத்து செய்திக்கு பின் இப்படியா
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன்பின் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
சோனியா அகர்வாலுடன் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய உதவி இயக்குனராக பணிபுரிந்த வந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு தற்போது மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த சமயத்தில் தனது இரண்டாவது மனைவியையும் செல்வராகவன் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது சூப்பர்ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மு
தல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்குமா அல்லது புதிய கதையில் இப்படம் துவங்குமா என்று தெரியவில்லை. அப்படி புதிய கதையாக இருந்தால் இப்படத்தில் செல்வராகவனின் முதல் மனைவி சோனியா அகர்வாலே மீண்டும் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.