பிரபுதேவா அந்த சீன்ல சொல்லாம அதை செஞ்சாரு.!! நடிகை செந்தில் குமாரி..
செந்தில் குமாரி
சின்னத்திரை சீரியலிலும் படங்களிலும் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை செந்தில் குமாரி. பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் செந்தில் குமாரி, பசங்க படம் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் நடிகை சார்மிளா எடுத்த பேட்டியொன்றில் காமெடி காட்சியில் நடித்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
சார்லி சாப்லின் 2
அதற்கு செந்தில் குமாரி, சார்லி சாப்லின் 2 படத்தின் போது நான் பிரபுதேவாவின் காதுக்கேட்காத அம்மா ரோலில் நடித்திருந்தேன். அப்போது ஒரு காட்சியில் பிரபுதேவா, என்னிடம் சொல்லாமலே கட்டிப்பிடித்து காதை கடித்தார்.
அதனால் நான் கத்தினேன். ஏன் சார் சொல்லாமல் அதை பண்ணீங்க என்று பிரபுதேவா சாரிடம் கேட்டபோது, சொல்லாம பண்ணனாலதான் நீ கத்துன என்று சொன்னார் என நடிகை செந்தில் குமாரி பகிர்ந்துள்ளார்.
