நடிப்பில் களமிறங்கிய சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலக்ஷ்மி.. சொதப்பலுக்கு பிறகும் இப்படியா
rajalakshmi
super singer
senthil ganesh
By Kathick
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி. நாட்டுப்புற பாடல்கள் பாடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார் செந்தில்.
இவர்கள் இருவரும் தற்போது வெள்ளித்திரையில் வெளியாகும் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு பின்னணி பாடல்கள் பாடி வருகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் கூட ராஜலக்ஷ்மி பாடல் ஒன்றை பாடியிருந்தார்.
இந்நிலையில், பின்னணி பாடகர்களான இவர்கள் இருவரும் இணைந்து தற்போது, ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. செந்தில் கணேஷ் ஏற்கனவே கறிமுகன் என்ற படத்தில் நடித்து, அப்படம் மிகப்பெரிய அளவில் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.