விவாகரத்துக்கு பின் பல ஆண்டுகள் கழித்து இரண்டாம் கல்யாணம்? சீரியல் நடிகை எடுத்த முடிவு..
Serials
Gossip Today
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை தீபா. சின்னத்திரையில் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் இவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வில்லியாகவும் நடித்து வருகிறார் நடிகை தீபா.
இதன் பின் பல சீரியல்களில் நடித்து வரும் தீபா வீடியோ எடிட்டருடன் சமீபகாலமாக நெருக்கமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. அவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை லவ் பாபு என்று கூட தீபா பகிர்ந்துள்ளார்.
தற்போது அவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகாத நிலையில் விரைவில் அவர்களே வெளியிட்டால் தான் அது உறுதியாக கூறமுடியும்.