லீக்கான மார்ஃபிங் புகைப்படங்கள்.. கதறி அழுத 40 வயது சீரியல் நடிகை
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய கதாபாத்த்ரித்தில் நடித்து பிரபலமானாவர் லட்சுமி வாசுதேவன்.
அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் லட்சுமி வாசுதேவன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழுதபடியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, சில நாட்களுக்கு முன் 5 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக மெசேஜில் இரு லிங்க் இருந்துள்ளது.
அதனை க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் ஒரு ஆப் டவுன்லோட் ஆனது. 3 நாட்கள் கழித்து 5 ஆயிரம் லோன் வாங்கியிருப்பதாக கூறியும் அதை கட்டவேண்டும் என்று கூறியும் ஆபாசமாக பேசிய கால்கள் மெசேஜ்கள் வந்தது.
பின் என்னுடைய புகைப்படத்தை ஆசிங்கமாக மார்ஃபிங் செய்து என் அம்மா மற்றும் என்னிடம் உள்ள போன் நம்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
என்னை மிரட்டியவர்கள் என் மார்ஃபிங் புகைப்படங்கள் அனைவருக்கும் அனுப்பட்டது எனக்கு தெரியவந்தது. பின் இது குறித்து சைபர் கிரைமில் புகாரளித்துள்ளேன் என்று கூறியதோடு கதறி அழுத்துள்ளார் லட்சுமி வாசுதேவன்.