கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்துட்டோம்!! ஆனா.. சீரியல் நடிகை நீலிமா ராணி..
நீலிமா ராணி
சின்னத்திரை சீரியல் நடிகையாக நடிக்க்க ஆரம்பித்து பின் பல படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. 21 வயதில் இசைவானன் என்பவரை அவரது விருப்பத்தில் திருமணம் செய்து கொண்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தியும் குழந்தைகளை கவனித்துக் கொண்டும் வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நடுத்தெருவுக்கு வந்துட்டோம்
அதில், எல்லார் வாழ்க்கையிலும் நடக்கும் சறுக்கல்களை போன்று என் வாழ்க்கையிலும் நடந்தது. எனக்கு திருமணமாகி 6 மாதத்தில் என் அப்பா இறந்துவிட்டார். அப்போது எனக்கு கஷ்டத்தை கொடுத்த போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினேன். அதன்பின் ஒரு படம் தயாரிக்க, வெளியில் இருந்து 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கினோம். ஆனால், அந்த படத்தை டஸ்பின்ல தான் போடவேண்டிய சூழல் இருந்துச்சு. நாங்கள் எல்லா பணத்தையும் இழந்துட்டோம்.
என் கணவர் எடுத்த முடிவு என்ன என்றால், இப்போது எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்தாச்சு, அடுத்து என்ன பண்ணப்போறோம், எங்க நகரப்போறோம் என்பதுதான். அப்போது நான் நடிக்க ஆரம்பிக்கலாம் என்ற முடிவை எடுத்தேன்.
அப்படி தான் வாணி ராணி சீரியலில் நடித்தேன். அதன்மூலம் கிடைத்த சம்பளத்தை வைத்து நண்பரின் வாடகை வீட்டுக்கு சென்று, ஒரே ரூமில் பாத்திரங்களை போட்டு தங்கினோம். அப்போது, எதிலும் குழம்பாமல், நிதானமாக யோசித்து பக்குவமாக நான் நடிக்க ஆரம்பித்தேன்.
மீண்டும் என்ன ஆனாலும் பரவாயில்லை, நாம் பார்த்துக்கலாம் என்று சின்னத்திரை சீரியலை தயாரிக்க ஆரம்பித்தோம். ஜீ தமிழில் என்றென்றும் புன்னகை, நிறம் மாறாத பூக்கள் போன்ற சீரியல்களை 1200 எபிசோட் வரை நாங்கள் தயாரித்தோம் என்று நீலிமா ராணி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.