என் பெயரில் தவறான வீடியோ லீக் - புலம்பிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
ரேஷ்மா
வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் பிஸியாக வலம் வருபவர் ரேஷ்மா. இவர், விஷ்ணு விஷால் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளிவந்த "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்" திரைப்படத்தில் புஷ்பா என்ற சிறிய ரோலில் நடித்து பிரபலமானார்.
இதைதொடரந்து இந்த ஆண்டு ரிலீசான 'விலங்கு' வெப் செரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்து இளைஞர்களை கவர்ந்தார். தற்போது பிரபல சீரியலான பாக்கியலட்சுமியில் நடித்து வருகிறார்.
லீக் வீடியோ
இந்நிலையில் ரேஷ்மா "தமிழா தமிழா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர், "உன் பெயரை வைத்து செ*ஸ் வீடியோ லீக் ஆகியுள்ளது என்று என் சகோதிரி சொன்னாள். அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இந்த வீடியோ சம்பவம் எனது பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.”
”என் தந்தை ஒரு பட தயாரிப்பாளர், என் சகோதரனும் நடிகர் எங்கள் குடும்பமே சினிமா பின்னணியை சேர்ந்தவர்கள். என் பெயரில் வெளிவந்த ஆபாச படம் மார்பிங் செய்யப்பட்டது என எளிதில் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது . எனக்கு நடந்தது போல் சாதாரண மக்களுக்கு நடந்திருந்தால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் " என்று கூறினார் ரேஷ்மா.
What a strong women ???? pic.twitter.com/iYX7zoChLN
— Vishnu® (@Vishnu1310) December 29, 2022