2 வேளை உணவுக்கே கஷ்டம்!! பிரபல நடிகரால் மாறிய ரசிகரின் வாழ்க்கை..
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் தன்னுடைய தலைவனுக்காக பல விஷயங்களை செய்து பிரபலமாவதுண்டு. அப்படி ஷாருக்கானின் ரசிகரான இப்ராகிம் காத்ரி என்பவர், ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவு உண்ணும் வகையில் மிகவும் குறைவான வருமானத்தில் இருந்துள்ளார்.
அவரது வாழ்க்கையை ஐபிஎல் மேட்ச் ஒன்று தலைகீழாக மாற்றியுள்ளது பற்றி பார்ப்போம்.
ஷாருக்கான் தோற்றம் இப்ராகிம் காத்ரி
பார்ப்பதற்கு ஷாருக்கான் போலவே இருக்கும் இப்ராகிம் காத்ரி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டையை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் மேட்சை பார்க்க வந்துள்ளார்.
பார்க்க ஷாருக்கான் போல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை சூழந்து கொண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஊடக வெளிச்சத்தில் கண்பட்டார் இப்ராகிம் காத்ரி.
அதிலிருந்து பல மடங்கு மவுசு அதிகரித்து, ஷாருக்கானை போல் இருப்பதால் பல நிகழ்ச்சிகளுக்கு அவரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். 2 வேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வந்த இப்ராகிம், இப்போது மாதம் ரூ. 5 லட்சம் வரையில் சம்பாதித்து வருகிறாராம்.
அவரது சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் சிலர் வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் உங்களை ஆச்சரியப்படுத்தும், நம்பிக்கையை மட்டும் விட்றாதீங்க என்று கூறி வருகிறார்கள்.