இயக்குனர் சங்கர் மகள் நடிகை அதிதி-யா இது!! வைரலாகும் சிறு வயது புகைப்படம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். 2.0 படத்திற்கு பிறகு பிரம்மாண்ட முறையில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் 15 வது படத்தினை இயக்கி வருகிறார்.
தற்போது இரு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். அதேசமயம் தன் மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகபடுத்தியும் வைத்தார். நடித்த முதல் படமான விருமன் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி அப்படம் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இப்படத்தினை தொடர்ந்து போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் லுக்கிலும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது அதிதி சங்கர் குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதிதியின் சிறு வயதில், தன் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் தான் அது. தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.