அழகில் மயங்காத இயக்குனர்? திரிஷாவை அசிங்கப்படுத்தி வளரவிடாமல் தூக்கி ஒதுக்கிய சங்கர்..
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை திரிஷா.
மிஸ் சென்னை பட்டத்தை வென்ற திரிஷா முன்னணி நட்சத்திரங்கள் விஜய், அஜித், கமல், ரஜினி, விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தார்.
இடையில் காதல், நிச்சயதார்த்தம் என்று ரூட்டை மாற்றியதால் வாய்ப்பினை இழந்தும் மார்க்கெட்டை இழந்தும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். அதன்பின் 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் கவரவுள்ளார்.
இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகளின் ஆடிஷன் நடந்தது. அப்போது கிஸ் சென்னை பட்டத்தை வென்ற திரிஷாவை பார்த்து சங்கரின் உதவி இயக்குனர் முத்துவிடுக என்பவர் சங்கரிடம் கூறியிருக்கிறார்.
ஜெனிலியாவின் ரோலுக்காக சங்கரிடம் பரிந்துரைத்த போது திரிஷாவின் வீடியோவை சங்கர் சாரிடம் காட்ட, ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது. வேறொருவரை தேடுங்கள் என்று கூறிவிட்டார். அதன்பின் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் திரிஷா ஜொலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Shankar Rejected #Trisha In #Boys pic.twitter.com/N4GN3zqZc7
— chettyrajubhai (@chettyrajubhai) July 24, 2022
