திருமணமாகி ஒரே வருடத்தில் போக்ஸோ சட்டம்.. இயக்குனர் சங்கரின் மருமகன் எடுத்த திடீர் முடிவு
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த ஆண்டு எளிய முறையில் கிரிக்கெட் வீரரும் தொழிலதிபரின் மகனுமாக ரோஹித் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.
ஐஸ்வர்யா - ரோஹித்
இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடத்த முடியாத நிலையில் கடந்த மே மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த பல கோடி செலவில் திட்டமிட்டு இருந்தார் இயக்குனர் சங்கர். பத்திரிக்கைகள் கொடுத்து வந்த நிலையில் ரோஹித்தின் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெற்று வந்த 16 வயது சிறுமியிடம் பலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு தொடர்ப்பட்டது.
இதனால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. இந்த செய்தி சங்கர் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மகளின் வாழ்க்கையை குறித்து கவலையில் இருந்துள்ளார் சங்கர்.

தற்காலிக ஓய்வு
இந்நிலையில் ரோஹித் பல மாதம் கழித்து இதுகுறித்து ஒரு முடிவெடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் யோசித்து தான் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். என் அடையாளம், அங்கீகாரம் அனைத்தையும் கொடுத்தது கிரிக்கெட் தான்.
என் வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் கிரிக்கெட்டிற்கு நேர்மையாக, உண்மையாக இருக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மன உளைச்சலில் தற்போது இருப்பதால் தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன் என்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.