விஜய் டிவி செய்த காரியத்தால் துயரத்தில் சரண்யா துராடி
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல் நடிகையாக மாறியவர் சரண்யா துராடி. ஆயுத எழுந்து என்ற தொடரில் நடித்த அவர் அதில் இருந்து பாதியில் வெளியேறினார். இடைவெளிக்கு பிறகு அவர் விஜய் டிவியின் புது சீரியல் வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடிக்க தொடங்கினார்.
அதில் ப்ரஜின் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவர் படத்தில் ஹீரோவாக நடிக்க சென்றுவிட்டார். அதனால் முன்னா ஹீரோவாக மாற்றப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின் சீரியல் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.
இது சரண்யா துராடிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இதனால் கடும் துயரத்தில் இருக்கிறாராம். 'கடின உழைப்பை குப்பையாக தூக்கி போட்டுவிடுகிறார்கள், இது பற்றி நான் என்ன சொல்ல முடியும், குட் லக்' என அவர் கூறி உள்ளார்.
என்னை உடைக்கலாம் ஆனால் அழிக்க முடியாது, நிச்சயம் இன்னும் வலிமையாக வருவேன் என சரண்யா தெரிவித்து இருக்கிறார்.