4 வருடமாக மட்டன் சாப்பிடுவதில்லை..காரணம் இதான்!! பைசன் பட நடிகை எமோஷனல்..
அனுபமா பரமேஸ்வரன்
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் பள்ளி சிறுமி ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வந்த அனுபமா, சமீபத்தில் பைசன் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் அனுபமா அளித்த பேட்டியொன்றில் மட்டன் சாப்பிடுவதை 4 வருடமாகிவிட்டது, அதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் நடிகை அனுபமா, 4 வருடங்களுக்கு முன் தெலுங்கில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்தபோது, ஷூட்டிங் நடைபெற்ற இடத்தில் ஆடுகளை வளர்க்கும் பட்டி இருந்தது. படப்பிடிப்பு இடைவெளியில் இங்கிருந்த ஆடுகளுடன் நான் விளையாடுவது வழக்கம்.
மட்டன் சாப்பிடுவதில்லை
ஒருநாள் எங்களுக்கு ஷூட்டிங்கில் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது. அன்று மாலைதான் என்னுடைய உதவியாளர் மூலமாக மதியம் பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணிக்கு நான் எந்த ஆட்டுடன் விளையாடினேனோ, அதை வெட்டி உணவாக்கி இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவந்தது.

அன்று முழுவதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. அன்றில் இருந்து நான் இப்போது வரை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன். இப்போதும்கூட அச்சம்பவம் என்னை சில நேரங்களில் அப்டெட்டாக்கி விடுகிறது என்று அனுபமா பகிர்ந்துள்ளார்.