நடிகை மீனாட்சி வீட்டுக்கே சென்று செருப்பால் நடித்த நபர்!! காரணம் இதுதான்..
மீனாட்சி கோவிந்தராஜன்
தமிழில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான கென்னடி கிளப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன்.
சரவணன் மீனாட்சி 3 சீரியலில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த மீனாட்சி, வேலன், வீரப்பாண்டியபுரம், கோப்ரா, டிமாண்டி காலணி 2, 2கே லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் மீனாட்சி, சென்னையில் மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார்.
செருப்பால் நடித்த நபர்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடிகை மீனாட்சி கோவிந்தராஜின் தாயாரை ஜெம்ஸ் என்ற மளிகைக்கடைக்காரர் வீடு புகுந்து செருப்பால் அடித்துள்ளார். அதை தடுக்க வந்த மீனாட்சியையும் அந்த நபர் தாக்கியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் மீனாட்சியின் தாயார் தன்னை செருப்பால் அடுத்ததால் பழிவாங்கியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். போலிசார் அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.