என் வாழ்க்கையில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை, நொந்து போய் ஸ்ருதிஹாசன் சொன்ன வார்த்தை
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் அதை தொடர்ந்து புலி, வேதாளம், பூஜை ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், ஸ்ருதிக்கு தமிழை விட தெலுங்கு மிகவும் கைக்கொடுத்தது, அதனாலேயே அங்கையே பல படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது கூட சலார் படத்தில் இவர் ஒரு கதாபாத்திரம் நடித்திருந்தார், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் படக்குழு இருக்க, கூடிய விரைவில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் ஒரு பேட்டியில், ‘என் வாழ்க்கையில் இவர் தான் ஸ்பெஷல் என்ற ஒருவரை இதுவரை நான் பார்க்கவே இல்லை.
காதல் தோல்வி என்று உங்களுக்கு ஏற்பட்டால், அதிலிருந்து மீண்டு வர மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும், அதனால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும்’ என்று நொந்து போய் கூறியுள்ளார்.