தொடர்பில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!
ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஓபன் டாக்!
இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் சுருதிஹாசன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " மற்றவர்கள் போல நானும் செல்போனை மிகவும் அதிகமாகவே பயன்படுத்துகிறேன். பல வேலைகளுடன் செல்போன் தொடர்பில் இருப்பதால், ஒன்றும் செய்ய முடியவில்லை.
சில நேரம் செல்போன்களில் சிக்னல் இல்லாமல் போகும்போது வெறுப்பாக இருக்கிறது. சில வேளைகளில் அதுவே மகிழ்ச்சியாகவும் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.