60 வயது ஹீரோக்களுடன் மட்டும் நான் ஜோடியா? ஆதங்கத்தில் பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகை என பன்முகம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான இவர், 2011 ஆம் ஆண்டு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதற்கு பின் பல வெற்றி படங்களை கொடுத்த ஸ்ருதி, தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹ ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வரும் பொங்களுக்கு வெளியாக உள்ளது.

60 வயது நடிகர்கள்
"இளம் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் சமீபகாலமாக 60 வயதான மூத்த நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார்" என்ற பல விமர்சனங்கள் வந்துள்ளது.
மேலும் "ஸ்ருதி ஹாசனுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்" என்று இணையத்தில் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தன் மேல் வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த அவர், "சினிமா துறையை பொறுத்தவரை வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே. சிறந்த நடிப்பாற்றல் இருந்தால் சாகும் வரை நடிக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக பல பேர் இருந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
