அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது: இப்போது புலம்பும் ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனனின் மகளாச்சே எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருந்தது என எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு அவரது நடிப்பு திறமையை பார்த்து மொத்த பேரும் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அவரது படங்களை பார்த்து மோசமான ட்ரோல்கள் தான் வந்தன. இந்நிலையில் தெலுங்கில் ப்ரேமம் ரீமேக் படத்தில் நடித்து அதிக ட்ரோல்களை சந்தித்தது பற்றி ஸ்ருதி பேசிஇருக்கிறார். அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது என அடிக்கடி தோன்றும் என அவர் தெரிவித்து உள்ளார்.
"அந்த ரோல் பிடித்ததால் தான் நடித்தேன். அப்படியே காபி அடிக்காமல் என்னுடைய ஸ்டைலில் நடித்தேன். எனக்கு மலையாள ப்ரேமம் பிடித்து இருந்தது, அவரை போல என்னால் நடிக்க முடியவில்லை. நல்ல வேலை படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாகவே ஓடியது" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்து உள்ளார்.