வாழ்க்கை கொடுப்பதாக கூறி ஏமாற்றிய பிரபலம்? நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்..
இந்திய திரையுலகில் ஸ்ரீதேவிக்கு அடுத்தபடியாக தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரியளவில் கவர்ந்திழுத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக எடுத்த சபதம் முடிப்பேன் என்ற படத்தில் மூலம் ஆரம்பித்தார்.
கனவுக்கன்னி
இதையடுத்து கவர்ச்சி கன்னியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. 17 வயதில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்த சில்க் ஸ்மிதா மன உளைச்சல் காரணமாக 1996ல் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
தற்கொலை செய்வதற்கு முன்1996 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி காலையில் சில்க் ஸ்மிதாவின் தோழி டான்சர் அனுராதாவுக்கு கால் செய்து பேசியுள்ளார். சில விசயங்களை கூறிய சில்க் ஸ்மிதாவிற்கு என்ன ஆச்சி என்று தன் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு அவரை சந்திக்க சென்ற அனுராதாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான்.
தாமதமாக வந்த அனுராதா சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் தற்கொலை தான் என்று கூறப்பட்டது.

கடிதம் எழுதிய சில்க்
இந்நிலையில் சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று எனக்கு தான் தெரியும். யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. சிலர் என் உடலையும் உழைப்பையும் பயன்படுத்தி என்னை ஏமாற்றினார்கள். மேலும் எனக்கு வாழ்க்கை தருவதாக கூறி 5 ஆண்டுகளாக ஒருவர் என்னை ஏமாற்றி விட்டார்.
நான் சம்பாதித்த சொத்தின் பாதியை பாபுவிற்கு கொடுக்க வேண்டும் என்றும் நான் அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் அவரும் என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு நடந்த கொடுமைகளால் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்திருந்தும் என்னை மரணத்திற்கு தள்ளியுள்ளது என்று சில்க் ஸ்மிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.