பிரபல பாடகி ஆஷா போஸ்லேவுக்கு என்ன ஆச்சு!! பேத்தி கொடுத்த விளக்கம்

Mumbai Tamil Singers
By Edward Apr 12, 2026 05:00 AM GMT
Report

ஆஷா போஸ்லே

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடி டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் பாடகி ஆஷா போஸ்லே. திடீரென நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 92.

பிரபல பாடகி ஆஷா போஸ்லேவுக்கு என்ன ஆச்சு!! பேத்தி கொடுத்த விளக்கம் | Singer Asha Bhosle Admitted To Mumbais Hospital

மும்பையிலுள்ள பீச் கேண்டி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் மருத்துவமனை சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள்.

பேத்தி விளக்கம்

இந்நிலையில், ஆஷா போஸ்லேவின் பேத்தி Zanai Bhosle இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என் பாட்டி ஆஷா போஸ்லே மாரடைப்பு, நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனியில் அனுமதிகப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரபல பாடகி ஆஷா போஸ்லேவுக்கு என்ன ஆச்சு!! பேத்தி கொடுத்த விளக்கம் | Singer Asha Bhosle Admitted To Mumbais Hospital

இந்நேரத்தில் தயவு செய்து எங்கள் தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுங்கள். விரைவில் நல்ல செய்தி உங்களை வாந்து சேரும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஆஷா போஸ்லேவுக்கு மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா, நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கலாம். வயது மூப்பு காரணமாக இவை எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறையும் என்பதால் வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இதுபோன்ற பிரச்சனையில் தான் தற்போது ஆஷா போஸ்லே இருக்கிறார். இதனல் பெரிய சிக்கல் எத்வும் இல்லை என்றும் கூறப்படுகிறது.