48 வயசுல கன்றாவி புடிச்ச ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்!! பாடகி சுசித்ராவின் மறுப்பக்கம்...
பாடகி சுசித்ரா
பின்னணி பாடகியாக இருந்து பல பாடல்களை பாடி பிரபலமான பாடகி சுசித்ரா, சில ஆண்டுகளுக்கு முன் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து முன்னாள் கணவர் கார்த்திக்கை படுமோசமாக விமர்சித்து பேசியும் இருந்தார். இதனைதொடர்ந்து 2வது திருமணம் செய்த சுசித்ரா, அதனால் வந்த பிரச்சனை குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கன்றாவி புடிச்ச ரிலேஷன்ஷிப்
அதில், சுச்சி லீக்ஸ் என்ற தர்த்திரம் புடிச்ச விஷயம் என் வாழ்க்கையில் நடந்தப்பின் இனி அதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்காது. ஆனால் அதைவிட ஒன்று நடந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் ஒருவரை காதலித்தேன்.
என் 48-வது வயதில் கன்றாவியான ஒரு ரிலேஷன்ஷிப்பில் போய் மாட்டிக்கிட்டேன். என் வாழ்வில் எதெல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது எல்லாம் நடந்தது. அவர் பெயர் சண்முகராஜன், நான் அவரை திருமணம் செய்ததாக கூட ஒரு பேட்டியில் தெரிவித்தேன்.
காரணம் அந்த சமயம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து, என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல் வந்தார். தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டான், நானும் என் வாழ்வில் நிறைய அடிப்பட்டு இருக்கிறேன்.
முதல் மனைவி
முதல் மனைவியால் நிறைய கஷ்டப்பட்டேன். இனி உனக்கு நான், எனக்கு நீ என இருப்போம் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறினார். அதை நானும் நம்பி காதலித்தேன். என் பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் தினமும் என்னை அடித்து, மிதித்து, துன்புறித்தி கொடுமைப்படுத்தினான். தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறினான். ஆனால் அவனது மனைவி என் வீட்டுக்கு வந்து என் கணவரை என்னிடம் கொடுத்துவிடு என்று கெஞ்சினாள்.
அவனை உண்மையாக காதலித்தேன். ஆனால் என் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டிவிட்டான். அது எவ்வளவு பணம் என்று சொன்னால் தலை சுற்றிவிடும். இப்போது நான் தெளிவாகிவிட்டேன்.
சண்முகராஜன் மீது வழக்கு போட்டுள்ளேன், அவனிடம் இருந்து மொத்த பணத்தையும் ஒரு பைசா கூட விடாமல் வாங்கிவிட்டு தான் விடுவேன், இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இனி என்னை அடிக்கடி நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று சுசித்ரா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.