என்ன அகங்காரப்பேச்சு!! நயன்தாரா சொகுசு பூனை.. வெச்சு செய்யும் சுசித்ரா
நயன்தாரா - தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கூட அவருடைய ஆவண படத்தில், நானும் ரௌடி தான் படத்தின் பாடல் வரிகள், காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அந்த ஆவண படத்தின் ப்ரோமோஷனாக தான் இந்த சர்ச்சையை நயன்தாரா கிளப்பினார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வந்தனர். அதை தொடர்ந்து, நயன்தாரா மூன்று குரங்குகள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.
சுசித்ரா பேட்டி
இந்நிலையில், நயன்தாரா ஒரு சொகுசு பூனை என்று கூறி பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், " தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை குறித்து நான் பாராட்டி பேசியிருந்தேன்.
ஆனால், நயன்தாரா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவருக்கு அகங்காரம் உள்ளது என்பது தெளிவாக தெரிந்தது. இது இரண்டு பணக்காரர்கள் மோதி கொள்ளும் விஷயம் தான். இருவருக்குமே பத்து கோடி என்பது டிப்ஸ் கொடுப்பது போன்று சாதாரணமான ஒன்று.
இவை அனைத்தும் நயன்தாரா பாலிவுட்டில் படவாய்ப்பு கிடைக்க செய்து வருகின்றார். உண்மையில், நயன்தாரா சொகுசு பூனைப்போல இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.