முத்துவுக்கு மச்சான் ரூபத்தில் வரும் அடுத்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை புது ப்ரொமோ
Star Vijay
Siragadikka Aasai
By Parthiban.A
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது முத்துவின் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். அதனால் அவர் மீனாவுக்கு ஆதரவாக இருக்க போகிறார் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் தற்போது முத்து மற்றும் மீனாவின் திருமண நாள் வருகிறது. அதற்கு கிப்ட் கொடுக்க நினைக்கும் முத்து தனது மனைவி மீனாவுக்கு தங்க மோதிரத்தை வாங்கி கிப்ட் ஆக கொடுக்கிறார்.
மச்சான் ரூபத்தில் வரும் பிரச்சனை
சிறையில் இருந்து வெளியில் வரும் வில்லன் முதலில் மீனாவின் தம்பி சத்யாவிடம் பணம் கொடுத்து திருமண நாளுக்கு செல்லும்படி சொல்கிறார்.
ஏற்கனவே சத்யா தவறான வேலை செய்வதற்கான அவனது கையை முத்து உடைத்து எச்சரித்து இருந்தார். ஆனாலும் திருந்தாத சத்யா மீண்டும் அதே கும்பலில் சேர்ந்து இருக்கிறார்.
சத்யா கிப்ட் வாங்கிக்கொண்டு அக்கா திருமண நாளுக்கு சென்று சேர்கிறார். மீண்டும் அங்கு பிரச்சனை வருமா என பார்க்கலாம். ப்ரோமோ இதோ..