சீரியல் நடிகை ராஜேஸ்வரி கணவருடன் சண்டையிட்டு தற்கொலை!! காரணமே 13 லட்சமா?

Serials Tamil TV Serials Tamil Actress Actress Siragadikka Aasai
By Edward Dec 13, 2025 11:30 AM GMT
Report

நடிகை ராஜேஸ்வரி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஜேஸ்வரி. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி, சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

சீரியல் நடிகை ராஜேஸ்வரி கணவருடன் சண்டையிட்டு தற்கொலை!! காரணமே 13 லட்சமா? | Siragadikka Aasai Serial Rajeshwari Suicide Reason

சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, கடந்த 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சைதாப்பேட்டையிலுள்ள தாய் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்ற ராஜேஸ்வரி தாயின் பிபி மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டதால் மயங்கியிருக்கிறார்.

பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றநிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பலரும் அதிர்ச்சியடைந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை ராஜேஸ்வரி கணவருடன் சண்டையிட்டு தற்கொலை!! காரணமே 13 லட்சமா? | Siragadikka Aasai Serial Rajeshwari Suicide Reason

காரணமே 13 லட்சமா?

இந்நிலையில் ராஜேஸ்வரியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராஜேஸ்வரி, தன்னுடைய மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் தனது வீட்டின் குத்தகை பணம் ரூ. 13 லட்சத்தை பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு அவரது கணவர் சதீஷ் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் சண்டையாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ராஜேஸ்வரி - சதீஷ் இடையே பிரச்சனை ஏற்பட அதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி தற்கொலை மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.