சிவகார்த்திகேயனா இப்படி.. வெளிநாட்டு நடிகையுடன் ரகசியமாக இதை செய்கிறாரா
சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றி அவருக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
அடுத்து அவர் எஸ்கே 20 படத்தில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் உடன் இந்த படத்திற்காக அவர் கூட்டணி சேர்ந்திருக்கிறார் .
சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Maria Ryaboshapka என்ற நடிகை நடிக்கிறார். அவர் உடன் சேர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான்ஸ் ரிகர்சலில் பங்கேற்று இருக்கிறார்.
விஜய் போன்ற பல முன்னணி நடிகர்கள் ரிகர்சலுக்கு வராமல் நேராக ஷூட்டிங்கில் வந்து ஆடுவார்கள். சிவகார்த்திகேயன் அப்படி இல்லாமல் ரிகர்சலுக்கு சென்று இருக்கிறார். வழக்கமாக இதெல்லாம் ரகசியமாக தான் நடக்கும், ஆனால் இந்த முறை அதன் போட்டோக்கள் எல்லாம் வெளியாகி வைரலாகிவிட்டது.
