அஜித், விஜய்.. அடுத்து நானா? நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில்!
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி படம் செம வசூல் வேட்டை நடத்திய படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது.
நச் பதில்!
இந்நிலையில், சிவகார்த்திகேயன், அஜித் விஜய் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். மக்கள் தற்போது உங்களை தான் அந்த இடத்தில் வைத்து பார்த்து வருகின்றனர்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி வர, அதற்கு மக்கள் தான் இதை முடிவு செய்ய வேண்டும். நான் உழைக்க தயார், ரஜினி, கமல், விஜய், அஜித் 4 பேருக்கும் தனித்துவம் இருக்கிறது.
நான் அது ஆக வேண்டும், இது ஆக வேண்டும் என்று யோசித்தது இல்லை. மக்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் எண்ணம்" என்று தெரிவித்துள்ளார்.