விஜய் பட தயாரிப்பாளருக்கு விபூதி அடிக்க பார்த்த சிவகார்த்திகேயன்.. அதுவும் தில்லு கிட்டேயே
Sivakarthikeyan
Vijay
Dil Raju
Varisu
By Kathick
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதை தவிர்த்து கமல் தயாரிப்பில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், மேலும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தமிழில் புதிய படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் முதன் முதலில் ரூ. 40 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளார். ஆனால், தில் ராஜு ரூ. 27 கோடி தான் தரமுடியும் என முடிவு செய்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயனும் இதற்க்கு ஓகே கூறியுள்ளாராம்.