நம்ம ஊரில் ஹீரோயின்களே இல்லையா.. சிவகார்த்திகேயன் செஞ்ச காரியத்தை பாருங்க
Sivakarthikeyan
SK20
By Parthiban.A
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தமிழ் தெலுங்கு bilingual படம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் தொடங்கியது.
இந்த படம் சிவகார்த்திகேயனின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஒரு வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நம்ம ஊரில் ஹீரோயினே இல்லையா, வெளிநாட்டு பெண்ணை கொண்டு வந்திருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர் மட்டுமின்றி மேலும் ஒரு பிரபல நடிகையும் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. அது யார் என்கிற அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.