அந்த விசயத்துக்கு தான் சிவகார்த்திகேயனை கல்யாணம் செய்தேன்!! வைரலாகும் மனைவி ஆர்த்தியின் வீடியோ..
அயலான் படத்தில் வெளியீட்டுக்கு பின் சிவகார்த்திகேயன் கமல் ஹாசன் தயாரிப்பில் அமரன் மற்றும் எஸ்கே23 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். படங்களில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் பற்றிய சில வதந்திகளான செய்திகள் இணையத்தில் கசிந்து விவாத பொருளாக மாறியது.
இமான் ஓப்பனாகவே இதுபற்றி பேச அதற்கு சில விமர்சகர்கள் அதற்கான ஆதாரமும் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் இது குறித்து எதையும் காதில் போடாமல் தன் படம் மற்றும் குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் மனைவியை திருமணம் செய்தப்பின் தன் மனைவி ஆர்த்தியை விஜய் டிவியில் பணியாற்றிய போது பேட்டி எடுத்திருக்கிறார். காமெடியோடு நடந்த அந்த பேட்டியில், என்னை எதற்கு திருமணம் செய்தாய் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதற்கு ஆர்த்தி, உங்களை பத்தி தெரியும், நல்லா டைம் பாஸ் ஆகும் அதனால் தான் என்று சொல்லியுள்ளார். இதை கேட்டு ஷாக்காகியுள்ளார் சிவகார்த்திகேயன்.