லெஜெண்டை தொட முடியாத சிவகார்த்திகேயன்! பிரின்ஸ் பரிதாப நிலை
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் என்றால் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் கவர்ந்தவர் என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
பிரின்ஸ்
டான் படம் ஹிட் ஆன நிலையில் தீபாவளிக்கு பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். ட்ரைலருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது, ஆனால் படம் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ஒரு SK ரசிகர் தியேட்டரில் இருந்து வெளியில் வந்து செருப்பால் தன்னை தானே அடித்துக்கொண்ட சம்பவம் கூட நடந்தது. அந்த அளவுக்கு மோசமான ரெஸ்பான்ஸ் தான் பிரின்ஸ் படத்திற்கு கிடைத்து இருக்கிறது.

லெஜெண்டை தொட முடியாத SK
இந்நிலையில் மலேசிய பாக்ஸ் ஆபிசில் லெஜண்ட் படம் வசூலித்த அளவுக்கு கூட பிரின்ஸ் வசூலிக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
லெஜெண்ட் படம் 5 நாட்களில் MYR 162,540 வசூலித்து இருந்தது. ஆனால் பிரின்ஸ் படம் 6ம் நாள் கூட அதை தொட முடியவில்லை. 6 நாட்களில் பிரின்ஸ் வெறும் MYR 129,272 மட்டுமே வசூலித்து இருக்கிறது.
பிரின்ஸ் வசூல் இந்திய ருபாய் மதிப்பில் வெறும் 35 லட்சத்தை விட குறைவு என்பதுகுறிப்பிடத்தக்கது.
#Prince Malaysia - MYR 129,272 [₹ 34.75 gross in 6 Days.#TheLegend - did MYR 162,540 from the first 5 days in Malaysia. #TheLegend reportedly took better BoxOffice than #Prince in many theatres across overseas ! pic.twitter.com/9gzyF900pj
— Premkumar Pro (@Pro__Premukumar) October 27, 2022